சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வரும் போது முன்னால் இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது பக்கவாட்டில் மோதியது.
இதில் பேருந்து ஓட்டுனர் திருநெல்வேலி மாவட்டம், சீவலபேரியைச் சேர்ந்த முருகன் (35) என்பவர் உயிரிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிய பேருந்து அருகே இருந்த தென்னம்பாடி குளத்திற்குள் இறங்கி சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .