தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் மேலும் அவர் கூறுகையில் ,தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என முதலமைச்சர் பதிலளித்தார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More