Mnadu News

தலைமை அலுவலகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அனில் அம்பானி…

கடனில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானி, தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார்.ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகமானது மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகமானது 7 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டதாகும். இந்த அலுவலகத்தைத் தான் தற்போது அனில் அம்பானி விற்க முடிவு செய்துள்ளார்.விற்க முடியாத பட்சத்தில் குத்தகைக்கு விடவும் அவர் திட்டமிட்டுள்ளார். தனது நிறுவனங்களின் நட்டத்தால் உண்டான கடன் சுமையை குறைக்கும் பொருட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

Share this post with your friends