தேர்தல் முடிவுக்குப் பின்னான கருத்துக் கணிப்புக்களை முக்கிய தேசிய செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. அந்தக் கருத்துக் கணிப்பில் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களைப் பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கருத்துக் கணிப்புகளால் வெற்றிபெற்று விடுவோம் என்ற ஆணவத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்றும் மத்தியில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தலாம் என்ற கேள்வி குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.