Mnadu News

விக்ரம் படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப். இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுராக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends