Mnadu News

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

ஹைட்ரோ கார்பன் தீயில் போன்ற திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி ஊராட்சியில் திமுக தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது,

இதில் தஞ்சை பகுதிகளுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன், கெயில் போன்ற திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு அதை வலியுறுத்த வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மூன்று இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து போர்வெல் மூலம் தண்ணீர் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share this post with your friends