மக்களவைத் தலைவர் அருகே செங்கோல்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பழனிசாமி கடிதம் .
பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் “ஜனநாயகத்தின் சின்னம்” என்ற புதிய நாடளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதே நேரம், தமிழர் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை விளக்கும் வகையில், மக்களவைத் தலைவர்;; இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க ‘செங்கோல்’ நிறுவப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.