Mnadu News

Editor

வடகிழக்குப் பருவமழைக்கு 2 பேர் பலி: தலா ரூ.4 லட்சம் இழப்பீடு .

இழப்பீடு குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரும் என இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.அதோடு, வடகிழக்குப் பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. பருவமழையை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை …

வடகிழக்குப் பருவமழைக்கு 2 பேர் பலி: தலா ரூ.4 லட்சம் இழப்பீடு . Read More »

விஷ்ணு விஷால் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிப்பின் அசுரன்!

விஷ்ணு விஷால் என்கிற நடிகர் எந்த கதையை தேர்வு செய்து நடித்தாலும் அதில் மிக பெரிய அற்பணிப்பு இருக்கும்.வெண்ணிலா கபடக்குழு, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், ஜீவா, ஃ ஐ ஆர்தமது சினிமா கேரியர் ஐ செதுக்கி வருகிறார் படத்துக்கு படம். கமர்ஷியல் படங்களையும், கதை அம்சம் கொண்ட கிளாசிக் படங்களையும் என இரண்டையும் கலந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர் இவர். எவ்வளவோ படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் அதை புறம் தள்ளி, …

விஷ்ணு விஷால் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிப்பின் அசுரன்! Read More »

சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதிகளில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த பாதிப்பும் இல்லை.தெற்கு ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விடியோவுடன் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.அதில், கடந்த ஓராண்டாக எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நிலைமை மேம்பட்டுள்ளது.இதனால், தண்டவாளப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல், வழக்கம் போல, ரயில்கள் அனைத்தும் …

சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு. Read More »

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா: இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மூன்றாம் தேதி பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்அதோடு, தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் …

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா: இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். Read More »

3 மாதம் வரை பயன்படுத்தும் ஆவின் ‘டிலைட்’ பசும்பால் அறிமுகம்.

3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் ஆவின் ‘டிலைட்’ பால் 500 மில்லி லிட்டர். பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது.குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. பாக்கெட்டின் சில்லறை விலை 30 -ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.500 மில்லி லிட்டர் ஆவின் டிலைட் பாலில் 3 புள்ளி 5 சதவிதம் கொழப்பு, …

3 மாதம் வரை பயன்படுத்தும் ஆவின் ‘டிலைட்’ பசும்பால் அறிமுகம். Read More »

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 6 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வேளையில், சென்னை, புதுச்சேரியில் ஒரு சில பகுதியில் வரும் 6 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதோடு. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, …

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. Read More »

அந்தமான் விமான நிலைய பராமரிப்புப் பணி: 14 சென்னை விமானங்கள் ரத்து.

அந்தமான் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னைக்கு வரும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தமான் விமான நிலைய பாராமரிப்புப் பணி மற்றும் அங்கு நிலவும் மோசமான வானிலையாலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மும்பையில் புதிய சிறைச்சாலை அமைக்க மகாராஷ்டிர அரசுத் திட்டம்.

மகாராஷ்டிர மாநில துணை முதல் அமைச்சர் ஃபட்னாவிஸ்; வெளியிட்டுள்ள தனது சுட்டுரை பதிவில், மாநிலத் தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புணே ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளின் தேவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஆர்தர் சாலையில் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே உள்ளது.எனவே, மும்பையில் புதிய சிறைச்சாலை மற்றும் ஏழு காவல் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார்.,

இந்தியன் 2 வில் பிரபல கிரிக்கெட் வீரர் தந்தை!

2018 ஆம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு சோதனைகளை கடந்து தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை துவங்கியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், குரு சோமசுந்தரம், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. 220 கோடி இப்படத்தின் பட்ஜெட் ஆகும். பான் இந்தியா படமாக இது …

இந்தியன் 2 வில் பிரபல கிரிக்கெட் வீரர் தந்தை! Read More »

நம் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியக்கிறது: மோடி பெருமிதம்.

கர்நாடகாவில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரையில், திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது. இது இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாக இருக்கும் இடம். உலகளவில் நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக விவரிக்கின்றனர். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அடிப்படைகளில் தொடர்ந்து …

நம் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியக்கிறது: மோடி பெருமிதம். Read More »