Mnadu News

Editor 3

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 12-12-2023: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை …

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு! Read More »

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். சென்னை பட்டாளம் …

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு Read More »

நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில், ‘அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதான் மோடியின் வாக்குறுதியா? காங்கிரஸ் கண்டனம்!

மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவைத் தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த மோகன் யாதவை பாஜக திங்களன்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்வு முடிவுகள் வெளியாகி 8 நாள்களுக்குப் பிறகு ம.பி. முதலமைச்சரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. உஜ்ஜயினியில் அவர் மீது பெரிய அளவிலான கையாடல்கள் உள்பட …

இதுதான் மோடியின் வாக்குறுதியா? காங்கிரஸ் கண்டனம்! Read More »

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கர்நாடகத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அபாயம் விளைவிக்கும் விதமாக எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த …

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! Read More »

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, …

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Read More »

புயல் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்; பிரதீப் ஜான்

சென்னையை நோக்கி அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் வரும் என்ற வதந்தி பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதை நம்ப வேண்டாம் என்று  வெதர்மேன் பிரதீப் ஜான், விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ‘இது அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 10ம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு …

புயல் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்; பிரதீப் ஜான் Read More »

மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில்,  ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடி குறித்து ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்று 45 நிமிட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதின் இந்தியில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான் என்று  ரஷியா அதிபர் புதின்  அந்த வீடியோவில் கூறியுள்ளார்.  இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான …

பிரதமர் மோடி குறித்து ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு Read More »

உலக பொருளாதாரம்; சக்திகாந்த தாஸ் அதிர்ச்சி தகவல்

உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்  இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது. உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. …

உலக பொருளாதாரம்; சக்திகாந்த தாஸ் அதிர்ச்சி தகவல் Read More »