Mnadu News

தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு 

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை, ஆற்றுப்பாலம், சோழன்சிலை ஆகிய இடங்களில் நேற்று நடை பெற்றது.

இதில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு மேற்கொண்டனர். இதில் தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ரத்தினவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு செயலாளரும், நீதிபதியுமான சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டன. மேலும் ஹெல்மெட் ஸ்டிக்கர், சீட் பெல்ட் தொடர்பான ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

Share this post with your friends