Mnadu News

‘பிக் பாஸ் 3’ நான் இல்லை – பிரபல நடிகை

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த மூன்றாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி நடிகைகள் சாந்தினி, ஜாங்கிரி மதுமிதா, விஜே ரம்யா இவர்களுடன் முன்னாள் கதாநாயகியான நடிகை லைலாவின் பெயரும் உள்ளது. இந்நிலையில், நடிகை லைலா தனது சமூகவலைதள பக்கத்தில் இதை சுட்டிக்காட்டி ‘பிக் பாஸ் 3’ தான் பங்கேற்கவில்லை என்றும், இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this post with your friends