அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக் கூறினார். இது அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக இளைஞர் அணியினர் அவ்வைத் திடலில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்தக் கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டது.