ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் யோகா செய்தனர்.எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் குப்வாரா மாவட்டத்தில், உலக யோகா தினத்தையொட்டி, வீரர்கள், யோகா ஆசனங்களை செய்தனர்.
இடையறாது மேற்கொள்ளும் கண்காணிப்பு பணிக்கு இடையே, மிகுந்த உற்சாகத்துடன், யோகாவின் பல்வேறு ஆசனங்களை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் செய்தனர்.குளிரான பருவ நிலைக்கு மத்தியில், BSF வீரர்கள், யோகா செய்யும் காட்சிகள், படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.