அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் என்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Flying Wallendas என்று கூறப்படும் நிக் மற்றும் அவரது சகோதரி லிஜானா ஆகியோர் இரு உயரமான கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் எதிரெதிரே நடந்து அசத்தினார் .
கயிற்றின் மத்தியில் இருவரும் நெருங்கி வந்த போது சகோதரி லிஜானா கயிற்றின் மீது அமர அவரை சகோதரர் நிக் தாண்டி சென்றது, அங்கு கூடி இருந்த 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது .
25 மாடி கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட 1300 அடி நீள கயிற்றின் மீது இவர்கள் நடந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது .