இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில், நடிகர் மம்முட்டி வரலாற்று படமான ‘மாமாங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ‘பைவ் ஸ்டார்’ பட நாயகி கனிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தினை தயாரிப்பாளர் வெணுகுன்னபிள்ளை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .