Mnadu News

வணிகம்

413 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிங் ஸ்டார் வைரம்.

ஹாங்காங்கில் நேற்று விடப்பட்ட ஏலத்தில் வில்லியம்சன் பிங் ஸ்டார் என்ற இளஞ்சிவப்பு வைரம்,. 170 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு, அதாவது 39 கோடியே 20 லட்சம் ஹாங்காங் டாலருக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 413 கோடி ரூபாய்க்கு, ஏலம் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் இன்று முதல் உயர்வு.

இயற்கை எரிவாயுவின் விலை இதுவரை இல்லாத அளவில் இம் மாதம் 1ஆம் தேதி 40 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்வுகளும் இன்று அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு கிலோ சிஎன்ஜி 78 ரூபாய் 61 காசு ஆக உயர்ந்துள்ளது. இதுபோல, வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு விலையும் ஒரு கன மீட்டர் …

சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் இன்று முதல் உயர்வு. Read More »

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய்; குறைந்து 38 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ருபாய் குறைந்து 4 ஆயிரத்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 66 ரூபாய் 50 ரைசாவாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 66ஆயிரத்து 500 ரூகபய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

5ஜி சேவைக்கு சிம் கார்டு மாற்றத் தேவையில்லை ஏர்டெல் அறிவிப்பு.

இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. இதற்காக, சிம் கார்டு மாற்றத் தேவையில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், 5ஜி சேவையை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளோம்.5ஜி இணைப்புக்கான கட்டமைப்புகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு பிற நகரங்களிலும் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் …

5ஜி சேவைக்கு சிம் கார்டு மாற்றத் தேவையில்லை ஏர்டெல் அறிவிப்பு. Read More »

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.

கடந்த ஒரு வாரமாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 81 ரூபாய் 90 பைசாவாக இருந்த ரூபாயின் மதிப்பு, மேலும் 32 பைசா வீழ்ச்சியடைந்து இன்று காலை 82 ரூபாய் 22 பைசாவாக குறைந்துள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.

ஆபரணத் தங்கம் விலை உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து 66 ரூபாய் 50 பைசா ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகன பதிவு நடைமுறை 24 மாநிலங்களில் அமல்.

பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் நறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போர் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூர் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்., இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த …

புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகன பதிவு நடைமுறை 24 மாநிலங்களில் அமல். Read More »

ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 480 ருபாய் அதிகரிப்பு.

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 835 ரூபாயக்கு விற்பனையாகி வருகிறது. அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 4 ரூபாய் 20 பைசா அதிகரித்து 67 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 67 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் 5வது பொருளாதார நாடாக திகழ பெருநிறுவனங்களே முக்கிய பங்கு ஆற்றி உள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நிறுவன செயலாளர்கள் அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசிய, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கிருஷ்ணராவ் காரத்,,உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதற்கு பெருநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.அதோடு, அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதில் நிறுவன செயலாளர்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறினார். மேலும், பெருநிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டில் 83 புள்ளி 57 பில்லியன் டாலர் அதாவது 8 ஆயிரத்து 300 கோடியே 57 …

உலகின் 5வது பொருளாதார நாடாக திகழ பெருநிறுவனங்களே முக்கிய பங்கு ஆற்றி உள்ளன. Read More »

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று 56 ஆயிரத்து 788 புள்ளி 81 ஆக நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 57 ஆயிரத்து 506 புள்ளி 65 ஆக தொடங்கியது. காலை 11.59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் ஆயிரத்து 133 புள்ளி 31 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளி 55 ஆக உயர்ந்து 17 ஆயிரத்து 233 புள்ளி 90 ஆக வர்த்தகமாகி வருகிறது.