Mnadu News

இந்தியா

தீபாவளிக்கு மறு நாள் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

இன்றும் நாளையும் வழக்கமான அரசு விடுமுறை நாள்களாகும். வரும் 24-ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

‘அக்னி பிரைம்’ பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 9.45 மணியளவில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏவுகணையின் பாதையானது பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் …

‘அக்னி பிரைம்’ பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி. Read More »

தேசவிரோத செயலில் ஈடுபட்ட சீன பெண் கைது.

டெல்லியின் வடக்கு பகுதியில் டிலா என்ற இடத்தில் திபெத்திய அகதிகளுக்கான காலனி உள்ளது. டெல்லி பல்கலை அருகேயுள்ள இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். இந்த பகுதியில் புத்த மத துறவி போல் காணப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர்.அப்போது அவர், தனது பெயர் டோல்மா லாமா எனக்கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அதே பெயரில் நேபாள குடியுரிமை சான்றிதழ் அவரிடம் இருந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை …

தேசவிரோத செயலில் ஈடுபட்ட சீன பெண் கைது. Read More »

அயோத்தியாவில் பிரதமர் மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைக்கிறார்.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம்; தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வரும் 23- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீPராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீPராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்கிறார். பின்னர் பகவான் ஸ்ரீPராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான …

அயோத்தியாவில் பிரதமர் மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைக்கிறார். Read More »

சுற்றுலா பயணிகள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், சமோலி மாவட்டம் சென்று பத்ரிநாத் கோயிலிலும் மோடி பூஜை செய்தார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ,மணா கிராமம், இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்பட்டது. ஆனால், இனிமேல், எல்லை பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும். கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ளதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். கேதார்நாத்தில் கடவுள் சிவனின் ஆசி பெற்றேன். கேதார்நாத்தில் அமைக்கப்படும் ரோப் …

சுற்றுலா பயணிகள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். Read More »

சந்திரயான்-3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஆனால், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி தரையிறங்காமல் லேண்டர் நிலவின் தரையில் மோதி உடைந்தது.அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் …

சந்திரயான்-3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம். Read More »

பருப்பு,வெங்காயம் விலை உயராது : மத்திய அரசு உறுதி.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், நாட்டில் வெங்காயம் மற்றும் பருப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் என்று கூறி உள்ளார்.43 லட்சம் டன் பருப்புகளும், 2 லட்சத்து 50 ஆயிரம்; டன் வெங்காயமும் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். தக்காளி விலை குறித்து ரோஹித், இது எளிதில் கெட்டுப்போகும் பொருள் என்பதால், அதன் விலை உள்ளூர் மதிப்பு …

பருப்பு,வெங்காயம் விலை உயராது : மத்திய அரசு உறுதி. Read More »

அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: இருவர் பலி.

அருணாசலப் பிரதேசத்தில் இட்டா நகரில் உள்ள சியாங்கில் இன்று காலை 10.43 மணியளவில்இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மீட்பு படையினரும் ராணுவத்தினரும் உயிரிழந்த நிலையில் இருவர் உடலை மீட்டுள்ளனர். மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவத்திலும் ஜிகாத்: சிவராஜ் பாட்டீல் பேச்சு.

சுயசரிதை நூலை நேற்று புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் பாட்டீல் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “இஸ்லாம் மதத்தில் ஜிகாத் இருப்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஜிகாத் இஸ்லாத்தில் மட்டுமல்ல இந்து, கிறிஸ்துவ மதங்களிலும் இருக்கிறது. மகாபாரதம், பகவத் கீதையில் ஸ்ரீP கிருஷ்ண பரமாத்மா ஜிகாத் பற்றி பேசியிருக்கிறார். குறிப்பாக மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் ஜிகாத் பற்றி பேசியிருக்கிறார். ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறியும் அதை சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றால் …

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவத்திலும் ஜிகாத்: சிவராஜ் பாட்டீல் பேச்சு. Read More »

ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது.அதையடுத்து, மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இன்று காலை கேதார்நாத் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.