Mnadu News

இலங்கை

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு.

ராமேசுவரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளது இலங்கை நீதிமன்றம். …

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு. Read More »

15 மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை: மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்து 500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகு மற்றும் அதில் இருந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று முன்தினம் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைதான 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10 …

15 மீனவர்களுக்கு 10 நாட்கள் சிறை: மன்னார் நீதிமன்றம் உத்தரவு. Read More »

இலங்கை தமிழர்கள் மூவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு..!

சென்னை பெரியமேட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தபோது சுமார் ஏழரை டன் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து இது சம்மந்தமாக 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது ஜாமினில் வெளியே வந்த இலங்கை தமிழர்கள் நிதி, யோக ராஜா, பாரதிதாசன் ஆகிய மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் …

இலங்கை தமிழர்கள் மூவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு..! Read More »

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக.

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான புனைகதை புக்கர் பரிசுப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 165 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.இதில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய ‘செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ நாவல் நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளது.இந்நாவல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக – இலங்கை அரசு நடத்திய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை …

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக. Read More »

இலங்கை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொருளாதார நிபுணர்கள்!!

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டு வருவதற்கு உரிய முறையில் கொள்கைகளை தயாரிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை …

இலங்கை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொருளாதார நிபுணர்கள்!! Read More »

மாற்றப்படவுள்ள சிறிலங்காவின் அந்தஸ்து! நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கத்தின் மற்றுமொரு நகர்வு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய, இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்திலிருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனை சிறிலங்கா அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து நிவாரண அடிப்படையில் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், பின்னர் இதுதொடர்பில் …

மாற்றப்படவுள்ள சிறிலங்காவின் அந்தஸ்து! நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கத்தின் மற்றுமொரு நகர்வு!! Read More »

சிறிலங்கா இராணுவத்திற்கு உடனடி பயணத்தடை – கனடா எடுத்துள்ள முதல் நடவடிக்கை!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் உறுப்பு நாடுகளினால் சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு உடனடி பயணத் தடை விதிக்கும். கொழும்பு ஆங்கில ஊடக தகவலின்படி, கனடா முதலில் இதைச் செயற்படுத்தும், குறைந்தது மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் கனடாவின் தடையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பதை” இலக்காகக் கொண்ட ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் …

சிறிலங்கா இராணுவத்திற்கு உடனடி பயணத்தடை – கனடா எடுத்துள்ள முதல் நடவடிக்கை!! Read More »

இலங்கை விவகாரத்தில் உறுதி பூண்ட இந்தியா!

இலங்கை ஆயுதப் படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க தயார் என இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது வழங்கியுள்ளார்.இந்தியாவில் இராணுவ பயிற்சிகளை பெற்ற இலங்கை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, பாதுகாப்பு படைகளின் அதிகாரி சவேந்திர சில்வா உட்பட்ட பல உயர் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். இதன்கீழ் சவாலான நேரங்களிலும் கூட, இலங்கை ஆயுதப்படைக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக அவர் வலியுறுத்தினார். …

இலங்கை விவகாரத்தில் உறுதி பூண்ட இந்தியா! Read More »

கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை! அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்!

நாட்டில் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு இன்றைய தினம் (07.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் விசாரணையை முன்னெடுக்க இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தவிர முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று …

கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை! அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்! Read More »

மீண்டும் மீண்டும் தாக்கப்படும் தமிழ் மக்கள் ,முல்லைதீவில் கடற்தொழிலாளர்கள் போராட்டம் !!

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமொரு கடற்தொழிலாளர்கள் அடங்கிய குழுவொன்று போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குழுவொன்று இன்று (05.10.2022) மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து குறித்த போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணை போகும் அதிகாரிகளை …

மீண்டும் மீண்டும் தாக்கப்படும் தமிழ் மக்கள் ,முல்லைதீவில் கடற்தொழிலாளர்கள் போராட்டம் !! Read More »