Mnadu News

TOP TAMIL NEWS

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2வுக்கு விடைத்தாள் திருத்தம் பணி முடிந்து விட்டது. பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்புக்கு விடைத்தாள் மதிப்பீடு நடந்து வருகிறது. இந்நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து …

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை Read More »

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்; 10 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் கடற்படை தினத்தின் ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு நிகழ்ச்சிகாக நடந்த ஒத்திகையின்போது 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த ஒத்திகையின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்; 10 பேர் உயிரிழப்பு Read More »

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் இருப்பது கண்டறியப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ரஷியாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது. இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக …

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை! Read More »

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 19-ந்தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,700-க்கும் ஒரு சவரன் ரூ.53,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் …

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் Read More »

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி – தீவிர சோதனை

நாடு முழுக்க நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 13 ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழக – கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை …

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி – தீவிர சோதனை Read More »

மணிப்பூரில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ந்தேதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், ஒரு சில இடங்களில துப்பாக்கிச்சூடு சம்பவமும், மிரட்டல் தொடர்பான சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இம்பால் கிழக்கு தொகுதிக்கு உடபட்ட மொய்ராங்காம்பு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு …

மணிப்பூரில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு Read More »

மகாவீர் ஜெயந்தி; பிரதமர் மோடி வாழ்த்து

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். புதுடெல்லி: நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு …

மகாவீர் ஜெயந்தி; பிரதமர் மோடி வாழ்த்து Read More »

சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை – அதிர்ச்சி தகவல்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 27 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. சென்னையில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 52.04 சதவீதமும் பதிவாகியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது சென்னையில் …

சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை – அதிர்ச்சி தகவல் Read More »

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்பால்: மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் …

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு Read More »