Mnadu News

உலகம்

ரஷிய சார்பை இந்தியா குறைத்துள்ளது : அமெரிக்கா தகவல்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும் போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகதன்மை வாய்ந்த நாடாக இல்லை என கூறியுள்ளார். உக்ரைனின் நலனில், இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது. இதனால், ரஷியாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும், அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம் ஆகும். ரஷிய பயணத்தில், இந்திய வெளியுறவு அமைச்சா ஜெய்சங்கர் கூறிய தகவல்கள், ஐ.நா.வில் …

ரஷிய சார்பை இந்தியா குறைத்துள்ளது : அமெரிக்கா தகவல். Read More »

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பிரதமர் டியூபா இரங்கல்.

மேற்கு நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1மணி 57 நிமிடத்தில் 6 புள்ளி 3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து நேபாள பிரதமர் ஷேர் பகதூர் கூறுகையில்,இந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடியாக, முறையான சிகிச்சை அளிக்க …

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பிரதமர் டியூபா இரங்கல். Read More »

டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்ற எலான் மஸ்க்.

உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், சமீபத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டர் சமூக வலைதளத்தை சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார்.அதையடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய ஒரு வாரத்திற்குள் டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார் எலான் மஸ்க்.நேற்று அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (எஸ்இசி) தாக்கல் …

டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்ற எலான் மஸ்க். Read More »

சீனாவில் தீவிரமடையும் கொரோனா! பாதிப்பு உயர்வு!

கொரோனவின் பிடியில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், மீண்டும் கொரோனா தன் கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 5,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கையாகும். அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி …

சீனாவில் தீவிரமடையும் கொரோனா! பாதிப்பு உயர்வு! Read More »

பேரணியில் துப்பாக்கிச்சூடு: இம்ரான் காலை துளைத்த 3 குண்டுகள் நீக்கம்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்த போது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இம்ரான்கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எனது வலது காலில் இருந்து …

பேரணியில் துப்பாக்கிச்சூடு: இம்ரான் காலை துளைத்த 3 குண்டுகள் நீக்கம். Read More »

காலத்தால் நிருபிக்கப்பட்ட இந்தியா – ரஷ்யா உறவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசிய போது, இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு காலத்தால் நிருபிக்கப்பட்ட உறவாகும் என்று கூறி உள்ளார்.அதோடு, சர்வதேச மற்றும் வட்டார பிரச்சனைகள் குறித்தும் ரஷ்ய அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விவாதித்து உள்ளார்.

வரும் 15 இல் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்: டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார்.அடுத்து, 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.அவருடைய ஆதரவாளர்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெரும் சர்ச்சைக்கு இடையே, …

வரும் 15 இல் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்: டொனால்ட் டிரம்ப். Read More »

நேபாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 4.40 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்பதும், இதேபோன்று ஜூலை 31-ந்தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. …

நேபாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்! Read More »

துபாயில் 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தின் அருகில் டவுன்டவுனில் உள்ள 35 மாடி எமார் பவுல்வார்டு வாக் கட்டிடத்தில் அதிகாலை 2.20 மணியளவில் தீப்பற்றியது. இதனையடுத்து, தீயானது வேகமாக கட்டிடத்தின் மேல்நோக்கி பரவத்தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4.00 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் …

துபாயில் 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து. Read More »

உலக கொரோனா நிலவரம் சொல்வது என்ன?

உலகத்தையே தன் பிடியில் வைத்துள்ள கொரோனா முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு வூகான் நகரில் தான் முதல் தொற்று ஏற்பட்டது. இந்த கோர பிடியில் இருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில், நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 77 லட்சத்து 24 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை …

உலக கொரோனா நிலவரம் சொல்வது என்ன? Read More »