Mnadu News

வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தற்பொழுது கடுமையான வெயில் நிலவியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.அண்மையில் வெப்பச்சலனம் காரணமாக நகரின் சில இடங்களில் மழை பெய்தது.இந்நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends