திருச்சி மதுரை சாலையில் அமைந்துள்ள நத்தர்சா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆரம்பித்த சந்தனக்கூடு பெரியகடை வீதி, மேலபுலிவார்டு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக நத்தர்ஷா பள்ளிவாசலை சென்றடைந்தது.
விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். இந்த பள்ளிவாசலில் நடைபெறும் 1022 வது சந்தனக்கூடு திருவிழா இதுவாகும்.