மூன்றாம் அணியை மாநிலக் கட்சியின் துணையுடன் அமைத்துவிடலாம் என்ற நோக்கில் சுற்றுப்பயணம் செய்து மாநிலக் கட்சி தலைவர்களை தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசி வருகிறார்.
மம்தா பானர்ஜி , பினராயி விஜயன் ஆகியோரை சந்தித்த பின் ஸ்டாலினை சந்திப்பதற்காக சந்திரசேகர ராவ் சென்னை வந்திருக்கிறார். மேலும் இந்தக் கூட்டத்தில் மத்தியில் கூட்டாட்சி அமைப்பது பற்றி ஸ்டாலினிடம் கே.சந்திரசேகர ராவ் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டத்தை மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்கள் புறந்தள்ளிய நிலையில் நடைபெறும் இந்தச் சந்திப்பு நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.