நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஏஞ்செல் என்பவர் இன்று டக்கரம்மாள்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,அவரை பின்தொடர்ந்து வந்த இருவர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
உடனடியாக ஏஞ்செல் சத்தம்போட்டதையடுத்து , அருகில் இருந்தவர்கள் இருவரையும் பிடித்து அடித்து உதைத்தனர்.பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த 2 திருடர்களை கைதுசெத்துள்ளனர் .