Mnadu News

சென்னைக்கு குடிநீர் வினியோகம் பைப் லைன் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது .அதன் அடிப்படையில் நேற்று மேட்டுசக்ரகுப்பத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. இது 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர் தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே புதிய பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அதன் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து பார்சம் பேட்டை ரயில்வே கேட் வரை சுமார் 3.5 கிலோ மீட்டருக்கு பைப்லைன் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அதற்கான பைப் லைன் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து 40 லாரிகளில் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தப் பணியை முடித்து அடுத்த வாரம் வினியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர் .

அதனடிப்படையில் 24 மணி நேரமும் இந்த பணி தொடர்ச்சியாக நடைபெறும் என கூறினர். மேலும் ஏற்று குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினை ஆய்வு செய்ய தொழிலாளர் வேலை வாய்ப்பு அரசு முதன்மை செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருமான சுனில் பாலிவால் மாவட்ட கலெக்டர் ராமன் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என கூறினர்.

Share this post with your friends