கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து ,அடுத்தபடியாக கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன.விடுமுறை முடிந்து முதல் நாள் கல்லூரிக்கு வந்தால் சில மாணவர்கள் தடைசெய்யப்பட்ட’பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் ,சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் முக்கிய சாலைகளில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தின் மேல் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள் திடீரென ஓட்டுநர் போட்ட பிரேக்கில் கீழே விழுந்தன.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .
I seriously dono whether to laugh loud for this instant meme or feel for these kids , but yes this is an offence …
Apparently they are Pachaiyappa’s College students of Chennai celebrating #BusDay 🤷♂️https://t.co/cB3TYT8Dg2 pic.twitter.com/VxX2yvIx6w
— Rakesh Gowthaman (@VettriTheatres) June 18, 2019