Mnadu News

முடிவிற்கு வந்தது ‘களவாணி 2’ படத்தின் விவகாரம்

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், நடிகர் விமல் மற்றும் ஓவியா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘களவாணி 2’. இந்த படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் வழங்கியுள்ளதாகவும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் இந்த படத்திற்கு தடை பெற்றிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், விமல் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ‘களவாணி 2’ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends