மீசை மற்றும் தாடி வைத்துக் கொள்வது என்பது ஆண்களுக்கான பிரத்யேகமான ஆசை. அதன் வடிவமைப்புக்காக சலூன்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் தமக்கு மீசை மற்றும் தாடி இல்லையே என வருந்தும் பருவ வயது ஆண்களுக்கு மத்தியில் தான் இந்த மீசை மற்றும் தாடித்திருவிழா பெல்ஜியத்தில் நடைபெற்றது.
சிறந்த மீசை மற்றும் தாடிகளை கொண்டவர் யார் என்பவரை தேடும் அந்தத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் வித்தியாசமான டிசைன்களில் தங்கள் மீசை மற்றும் தாடிகளை வடிவமைத்துக் கலந்துக் கொண்டனர்.