Mnadu News

திருச்சியில் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும், 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் இருந்தனர்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)-29,742

இளங்கோவன் (தே.மு.தி.க.)-7,124

சாருபாலா (அ.ம. மு.க.)-4,991

முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் இருந்தார்.

Share this post with your friends