Mnadu News

வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை …

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.கடந்த 5- ம் தேதி அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின.வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முற்பகல் 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends