முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மே 21 ஆம் தேதி அன்று விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் .
இவருடைய 28 ஆவது நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இவரது மகளான பிரியங்கா காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .அந்த பதிவில் என் அப்பா தான் எப்போதும் எனக்கு ஹீரோ என்று பதிவிட்டிருந்தார் .
மேலும் அந்த பதிவில் தந்தையை கட்டியணைத்தபடி எடுத்த அவரது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் .