தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்து எம்.உசிலம்பட்டியில் இருந்து காயாம்பட்டி வழியாக ஒலியமங்கலம் செல்லும் சாலையானது, கடந்த பத்து ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது இதனால் அந்த பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் பயணிக்கும்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வாய்த்த கோரிக்கையின் பலனாக அந்த பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
அமைக்கப்பட்டுள்ள அந்த சாலை தரமற்ற முறையில் உள்ளதாக புகார் கூறி வரும் அப்பகுதி பொதுமக்கள், தார்சாலையை தங்களது கைகளால் பெயர்த்து எடுத்தனர்.
தரமற்ற முறையில் அமைந்த அந்த சாலையை அகற்றிவிட்டு தரமான புதிய சாலையை அமைத்து தர அந்த பகுதி மக்கள் மீட்டும் வலியுறுத்தியுள்ளனர் .