Mnadu News

அத்திவரதரின் 13 ஆவது நாள் வைபவம் பச்சைப்பட்டு உடுத்தி பக்தர்கள் தரிசனம்

அத்திவரதரின் 13 ஆவது நாள் வைபவத்தை முன்னிட்டு அத்திவரதர் இன்று பச்சை பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி துவங்கி 13 நாட்கள் ஆன நிலையில் வரதரை காண நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் பெருகி வருகிறது. இந்நிலையில் அத்திவரதர் இன்று பச்சை பட்டு உடுத்தி பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். மேலும் பல வண்ண பூக்களால் அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் காமராஜ் மற்றும் வளர்மதி ஆகியோர் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தனர். சுவாமியை தரிசனம் செய்த பின்பு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து தற்போது 20 மினி பேருந்துகள் இயங்கி வருகிறது. மேலும் கூடுதலாக 10 மினி பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை காண காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Share this post with your friends