உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தியோரியா ரயில் நிலையத்தில் டிக்கெட்டு வாங்க பயணிகள் வரிசையில் நின்றனர். அப்போது இருவர் மட்டும் வரிசையில் நிற்காமல் இடையில் புகுந்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.
வரிசையில் நிற்காமல் பயணிகளுக்கு இடையூறு கொடுத்த அந்த இருவரை கண்ட ரயில்வே காவலர் ஒருவர், அவர்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட இருவரும் சேர்ந்து, காவலரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
காவலர் தாக்கப்பட்டதை கண்ட பயணிகள் அச்சத்துக்கு உள்ளானதால் அந்த இடம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டதாக கூறப்படுகிறது . ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே காவலரை தாக்கிய அந்த இருவரையும் உடனடியாக காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் .