தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் விக்ரமன் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து சென்னை கமலா திரையரங்கில் நேற்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா, போட்டியின்றி தலைவராக தேர்வாகி உள்ளார்.