‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நாயகன் வெற்றி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘ஜீவி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் வி.ஜே.கோபிநாத் கூறுகையில் “விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம்.
இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஜூன் 28ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது .