Mnadu News

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக 61 பேர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர் .இந்நிலையில் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார் .

இந்நிலையில் நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார் மாவட்ட பதிவாளர் .

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends