Mnadu News

தண்ணீர் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வன் தலைமையில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், விரைவாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this post with your friends