திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை , ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்தார்.
ஸ்டாலின் அவர்களை சந்தித்த அவர் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மக்களவை தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இலங்கை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான் அதிபரை தேர்ந்தெடுப்பதில் மிகப் பெரிய பங்கு வகிப்பர் என்றும் அவர் கூறியுள்ளார் .