சமீபத்தில் ட்ரெண்டான வடிவேலு அவர்களின் friends பட காமெடி ட்ரெண்டானது இதனையடுத்து ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து ஒருமையில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வடிவேலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.