மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி என்று குறிப்பிட்டு, அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது பிழை என்று கூறியுள்ளார். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”என்ற பழமொழியை சுட்டிக்காட்டிய அவர், தமிழர்கள் தலைவனாக வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்று குறிப்பிட்டார்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019