கனடாவில் கடல்வாழ் உயரிங்களான டால்பின் மற்றும் திமிங்கலங்கள் வளர்க்க அந்நாட்டு அரசு தற்போது தடை விதித்துள்ளது
அந்நாட்டில் தனி நபர் அல்லது தனியார் நிறுவனங்கள் டால்பின் மற்றும் திமிங்கலங்களை சட்டவிரோதமாக பிடித்து வளர்க்கவும் அதனை இனப்பெருக்கம் செய்யவும் தடைவிதித்துள்ளது .இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ஃப்ரீ வில்லி என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத சட்டத்தை மீறி அவற்றை பிடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட நேரலாம் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.