Mnadu News

காற்றின் வேகம் காரணமாக பாம்பன் விசைபடகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி ரத்து

கடந்த இரண்டு தினங்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்று சுமார் 55 முதல் 60 கிமீ வேகத்தில் வீசி வருகிறது.இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடி தொழில் செய்யும் பாம்பன் விசைபடகு மீனவர்களுக்கு மீன்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க அனுமதி வழங்கவில்லை.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் பிடிக்க செல்லாமல் பாம்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends