இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. வானொலி மூலம் உரையாற்றும் பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளார் என அகில இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறிய பிறகு நாட்டு மக்களிடம் முதன் முறையாக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தகுந்தது .இந்நிலையில் ,பிரதமர் நரேந்திர மோடி மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றுவதாக வெளியிட்ட ட்விட்டை நீக்கியது அகில இந்திய வானொலி .