கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிகளுடன், எரிபொருள் நிரப்பும் பணியும் நடைபெற்றது.இவை முடிவுற்றதைத் தொடர்ந்து, முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க ஏதுவாக, வெப்ப நீர் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து, முதல் அணு உலையில், இன்று நள்ளிரவு 12.10 மணி முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More