விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வானம்பட்டு கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக மின்மோட்டார் பழுதால் கிராம மக்கள் குடிதண்ணீருக்கு அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று குடி தண்ணீர் கொண்டுவந்து பயன்படுத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரையில் சரி செய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். மேலும் கிராம மக்களுக்கு குடிதண்ணீர் பைப்பை சரி செய்யவில்லை என்றால் திங்கட்கிழமை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.