கடந்த மே 30 ஆம் தேதி லண்டனில் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்றன . விறுவிறுப்பாக நடந்த இந்த தொடரின் இறுதிச் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
கடினமான இலக்கை இங்கிலாந்து அணிக்கு கொடுக்க முயன்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து கோப்பையை கைப்பற்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . பென் ஸ்டோக்ஸ்- பட்லர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.மறுமுனை வீரர்கள் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் நிதானமாக வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றார். இருப்பினும் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 241 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் டை-யில் முடிந்து அனைவரையும் பரபரப்பாகியது
வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க வீசப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளை எடுத்த இங்கிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். நியூசிலாந்தைப் பொறுத்தவரை இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.