பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் NGK .இதனை அடுத்து இயக்குனர் கே.வி.ஆனந்த் சூர்யாவை இயக்கவுள்ளார் . அடுத்தடுத்து சூர்யா பல படங்களில் நடிக்க உள்ளார் .சூர்யாவின் 38 ஆவது படத்தை இறுதிச்சுற்றின் இயக்குனரான சுதா கோங்ரா இயக்கவுள்ளார் .
இந்த படத்திற்கான பூஜைகள் சமீபத்தில் நடந்த முடிந்துள்ளது அதில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக் மேலும் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் . இசையமைப்பு வேலைகளும் அண்மையில் தொடங்கிவிட்டன .இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு 2 வது பாடல் குறித்த தகவல் வெளியாகும் என அந்த பதிவில் கூறியுள்ளார்.
Next collab update of #suriya38 on Saturday evening 6.30 … song 2 .. this is again another sensational unexpected combo …
— G.V.Prakash Kumar (@gvprakash) April 10, 2019