நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை மக்களவை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் போட்டியிட்ட அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில், தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் மிக
குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் இவரை விட குறைவாக 20 வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16838 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.