Mnadu News

வெள்ளை மாளிகை முன் பாகிஸ்தான் பிரதமருக்கு கடும் எதிர்ப்பு

அரசு முறைப் பயணமான அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஏற்கெனவே அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவருக்கு எதிர்ப்புக்கள் எழுந்ததோடு வாஷிங்டனில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் அவரது வருகைக்கு சில நாட்கள் முன்பாகவே அமெரிக்காவின் பல இடங்களில் உலவ விடப்பட்ட பலுசிஸ்தான் ஆதரவாளர்களின் பேனர்கள் அடங்கிய வாகனம், வெள்ளை மாளிகை அமைந்துள்ள சாலையிலும் உலவவிடப்பட்டு இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Share this post with your friends